Popular Posts

Saturday, January 1, 2011

ஒளிவுமறைவற்ற (தெளிவான) இறைநம்பிக்கை

நபித்தோழர்களில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "எங்கள் உள்ளத்தில் சில (தடுமாற்றமான) விஷயங்கள் எழுகின்றன. அவற்றை (வெளிப்படுத்திப்) பேசுவதைக்கூட நாங்கள் மிகப்பெரும் (பாவ)காரியமாகக் கருதுகிறோம்" என்று கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உண்மையிலேயே நீங்கள் அத்தகைய உணர்வுகளுக்கு உள்ளாகின்றீர்களா?" என்று கேட்டார்கள். அதற்கு நபித்தோழர்கள், "ஆம்" என்று பதிலளித்தார்கள். அதற்கு, "அதுதான் ஒளிவுமறைவற்ற (தெளிவான) இறைநம்பிக்கை" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி).

நூல் : முஸ்லிம் 188

No comments:

Post a Comment