Popular Posts

Tuesday, December 28, 2010

தேவையின்றி மூக்கை நுழைக்காதே!

*அல்லாஹ்வின் திருப்பெயரால்...*
*தேவையின்றி மூக்கை நுழைக்காதே!*

*''ஒரு மனிதர் தனக்குத் தேவையில்லாதவற்றை விட்டுவிடுவது அவரது அழகிய
இஸ்லாத்திற்கு (கட்டுப்பாட்டிற்கு) எடுத்துக்காட்டாகும்''என்று இறைத்தூதர்(ஸல்)
அவர்கள் கூறினார்கள்.*

*அறிவிப்பாளர்: அலிய்யுப்னுல் ஹீஸைன் நூல்: மாலிக் அஹ்மத்*

*விளக்கவுரை*

*தேவையற்ற பேச்சு, நடவடிக்கைகளில் ஈடுபடலாகாது என்பதே இதன் கருத்து. அவற்றினால்
பிறரது நலன்கள் பாதிக்கப்படும் என்பது திண்ணம்! பொய், புரட்டு, புறம், கோள்,
ஏசுதல், சாபம் போன்றவை அனைத்துமே தேவையற்ற பேச்சாகும். பயனற்ற, மார்க்கத்தில்
தடுக்கப்பட்ட செயல்முறைகள் அனைத்தும் தேவையற்றவையாகும். கெடுக்கும் எண்ணத்தில்
பிறர் விஷயத்தில் தலையிடுவோரிடம், தேவையின்றி என் விஷயத்தில் மூக்கை
நுழைக்காதே! என்று பாதிக்கப்படுவோர் கூறக் கேட்கின்றோம்*.
*இறந்து விட்ட ஒரு மனிதருக்கு சுவனம் கிடைப்பதற்காக நன்மாராயம் கூறுமாறு வேண்டி
நின்ற மனிதரிடம், ''அவர் தனக்குத் தேவையில்லாத பேச்சுக்களை பேசியிருக்கலாம்;
அல்லது குறைவு செய்யக்கூடாத விஷயத்தில் கஞ்சத்தனம் செய்திருக்கலாம் என்பது
உமக்குத் தெரியாதா?'' என நபியவர்கள் திருப்பிக் கேட்டது நினைவு கூறத்தக்கது.
(அறிவிப்பாளர்: அனஸ் - நூல்: திர்மிதீ)

No comments:

Post a Comment