"ஒருவர் ஒரு பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவருக்குக்
கடுமையானத் தாகம் ஏற்பட்டது. அவர் (வழியில்) ஒரு கிணற்றைக் கண்டார். உடனே
அதில் இறங்கித் தண்ணீர் குடித்தார். பிறகு (கிணற்றைவிட்டு) அவர் வெளியே
வந்தார். அப்போது நாய் ஒன்று தாகத்தால் (தவித்து) நாக்கைத் தொங்கவிட்டபடி
ஈரமண்ணை நக்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அந்த மனிதர் (தம்
மனத்திற்குள்) 'எனக்கு ஏற்பட்டதைப் போன்ற (அ)தே (கடுமையான தாகம்) இந்த
நாய்க்கும் ஏற்பட்டிருக்கிறது போலும்' என்று சொல்லிக்கொண்டார். உடனே
(மீண்டும்) அக்கிணற்றில் இறங்கித் (தண்ணீரைத் தோலால் ஆன) தன்னுடைய
காலுறையில் நிரப்பிக்கொண்டு அதைத் தம் வாயால் கவ்வியபடி (மேலேறி வந்து)
அந்த நாய்க்குப் புகட்டினார். அல்லாஹ் இதற்கு நன்றியாக அவரை (அவரின்
பாவங்களை) மன்னித்தான்" என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள்
கூறினார்கள். (இதைச் செவியேற்ற) மக்கள், 'இறைத்தூதர் அவர்களே!
மிருகங்களுக்கு உதவும் விஷயத்திலும் எங்களுக்கு (மறுமையில்) நற்பலன்
கிடைக்குமா?' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்)
அவர்கள், '(ஆம்:) உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு
உதவும்பட்சத்தில் மறுமையில்) அதற்கான நற்பலன் கிடைக்கும்' என்று
கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)
நூல்: புஹாரி எண் 6009
Popular Posts
-
ஜூதி மலைமீது தங்கிய நூஹ் நபியின் கப்பலும்; வீட்டின் மாடி மீது அமர்ந்த ஜப்பான் கப்பலும்! "பூமியே! நீ உன் நீரை விழுங்கி வ...
-
அஸ்ஸலாமு அலைக்கும் அல்குர்ஆனின் சிறப்புகள்! காலமாற்றங்கள் அல்குர்ஆனை காணடிக்க முடியவில்லை. எல்லாக் காலங்களையும் வென்றதாக எக்கால...
-
அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும் ஏற்படாது. அவன் எங்கள் அதிபதி. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண...
-
மகளின் தயவில் தாய் ஒரு பெண் தனது எஜமானியைப் பெற்றெடுத்தால் அது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி....
-
பேரழிவுகளும் பாவமன்னிப்பும் நீங்கள் வேதனைக்கு பயந்து கொள்ளுங்கள் அது உங்களில் அநியாயம் செய்தவர்களை மட்டும்தான் குறிப்பாகப் பிடிக்கு...
-
குர்ஆனின் முன்னறிவிப்புகள் கஃபா (அபய பூமி) (இதையும் எண்ணிப் பாருங்கள்; “கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும...
-
“நிச்சயமாக, யார் அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக விழுங்குகிறார்களோ அவர்கள் தங்கள் வயிறுகளில் விழுங்குவதெல்லாம் நெருப்பைத்தான் – இன்னும் அ...
-
http://www.ziddu.com/download/12938468/TamilQuran.chm.html
-
"தன்னிடம் ஓர் அடிமைப் பெண் இருந்து, அவளுக்கு அவர் கல்வி கற்றுக் கொடுத்து, அவளை நல்ல முறையில் நடத்தி, பிறகு அவளை விடுதலை செய்து திரும...
-
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நல்ல நண்பன் கஸ்தூரி வியாபாரியைப் போலாவான். கஸ்தூரி வியாபாரி உனக்கு அதனை (இனாமாகத்) தரலாம். அல்லது நீ அதனை...
No comments:
Post a Comment